Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » தடையற்ற இன்பத்திற்கு…

தடையற்ற இன்பத்திற்கு…

உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மை யினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர்.
 
திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம். தங்களின்
அதிருப்திக்கு கணவர்களின் அவசர செயல்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள்.
 
மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்;தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால் உணர்ச்சிகளால் கிளறப்பட்டு உச்சநிலை அடையாத பெண்கள் பாலியல் வேட்கையை தணிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும், தவிப்பிற்கும் ஆளாகிறார்கள். அதை வெளிப்படையாகக் காட்டமுடியாமல் வெறுப்புக்கு ஆளாவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மணமுறிவுகள், பிரிவுகள், முறை தவறிய உறவுகள் என்று பல வழிகளில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது.

நாள்தோறும் செய்தித் தாள்களைப் புரட்டிப் பார்த்தால் இப்படி முறை தவறிய உறவுகள் பற்றி செய்திகள்தான் அதிகம் வருகின்றன. செக்ஸ் திருப்தியின்மையின் விளைவுகள்தான் இவை என உளவியல் நிபுணர்கள் கூறுகிறhர்கள். இந்தத் தவறுகளுக்கு மூலக்காரணமாக ஆண்கள் இருக்கிறhர்கள். …காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்† என்பதை ஆண்கள் மறந்துவிடுகிறhர்கள். தாங்கள் இன்பம் அடைந்தவுடன் உறங்கச் சென்றுவிடும் இவர்கள் கூட்டுக்கலையான பாலியல் கலையில் தன் சக கூட்டாளிக்கு இன்பம் கிடைத்ததா என்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இதுதான் பிரச்சினைக்கு வேர் போன்றது என்பதை பல ஆண்கள் உணரா மல் இருப்பது சோகம்.
 
இன்று மது, புகை போன்ற பழக்கங்கள், சர்க்கரைநோய், இதயநோய் போன்றவை சகஜமாகிவிட்டன. எனவே, ஆண்களுக்கு உடல் ரீதியாகவும் பிரச்சினைகள் வர நிறைய வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் செக்சில் முழு இன்பம் தராமல் போகவும் இடம் உள்ளது. விளைவு? சம்பந்தப்பட்ட துணை விரக்தியடைவது!

பாலுறவில் பெண்ணுறுப்பின் மேற்புறத்திலுள்ள கிளிட்டோரிஸ் தூண்டல் என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்ணை முழுஇன்பப் பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கை இது. கிளிட்டோரிஸ் என்பது உணர்ச்சி நரம்புகளின் முடிச்சு மையம். இதை சரியானபடித் தூண்டினால் காமனை வெல்லலாம். இதை கையாளத் தெரியாதவர்களுக்கும், முயற்சி செய்து வருபவர்களுக்கும் துணையாக தற்போது இந்தியாவில் முதன் முறையாக ராக்ஸ் என்ற அதிர்வு காண்டம் விற்பனைக்கு வந்துள்ளது.
 
பொதுவாக காண்டம் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். அது என்ன அதிர்வு காண்டம்?
மைக்ரோபேட்டரி, சிப்ஸ் அடங்கியுள்ள இந்த சாதனத்தில் காண்டத்தைப் பொறுத்திக்கொள்ள வேண்டும். பாலுறவின் போது பாட்டரியை இயங்கச் செய்தால் அது உணர்ச்சி மையமான கிளிட்டோரிசைத் தூண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தும். இதனால் பெண்களுக்கு இனம் புரியாத இன்பம் ஏற்பட்டு பாலுறவின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். தாம்பத்திய உறவில் சரியாக ஈடுபட முடியாதவர்கள், நீரிழிவு போன்ற பாதிப்பினால் விரைப்புத் தன்மை குறைந்தவர்கள், 40 வயதுக்கு மேலாகி பாலுறவில் திருப்தியாக ஈடுபட முடியாதவர்கள் ஆகியோருக்கு இந்த காண்டம் சிறந்த பலன்தருகிறது. விரைப்பில்லாதவர்களுக்கு பலன்தராது. முறை தவறிய உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.
 
மனைவி மகிழ்ச்சியாக உள்ள குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். மகளை விசாரிப்பவர்கள், …மாப்பிள்ளை சந்தோஷமாக வைச்சிருக்காரா?† என்பார்கள். இதன் பொருள் தாம்பத்தியம் திருப்திகரமாக உள்ளதா என்பதுதான்.
 
என்ன சந்தோஷம்…? என மகள் அலுத்துக் கொண்டால்.. பிரச்சினைதான்.
 
-டாக்டர் டி. காமராஜ-

Leave a Reply