Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’

`சூயிங்க் கம்’ சாப்பிட்டால் மன அழுத்த பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். மனம் மிகுந்த விழிப்புடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். பொதுவாக சூயிங்க் கம் சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காத விஷயமாக கருதப்படுகிறது. எனவே இந்த புதிய ஆய்வின் முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

22 வயதிற்கு உட்பட்ட நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில் சூயிங்க் கம் சாப்பிடுவதன் நன்மை தெரிய வந்துள்ளது. அதன்படி சூயிங்க் கம் சாப்பிடும் நபர்கள் மற்ற நபர்களை விட மன அழுத்தமான சூழலில் இருந்து எளிதாக விடுபடுகிறார்கள். மற்ற நபர்களை விட வேலையை சிறப்பாக செய்கின்றனர். கோபத்தை உண்டாக்கும் `கார்டிசால்’ என்ற வேதிப்பொருளும், சூயிங்க் கம் சாப்பிடும் நபர்களின் உடலில் குறைவாக சுரக்கிறது. இனி, சூயிங்க் கம் சாப்பிடும் நபர்களை பார்த்து முகம் சுழிக்காமல் பாராட்ட வேண்டியதுதான்.

Leave a Reply