என்னுள்ளம்
ஏகமனதாய்
ஏற்றுக்கொண்ட
இளமைக்கவிஞனே…!
உனது
பேனாவிலிருந்து கசியும்
ஒவ்வொருதுளி மையும்
ரவிவர்மனை எஞ்சில
ஓவியங்களாய்
எனது மனதில்….
இராமனின் மனைவியால்
காவியம் படைத்தவன்
கம்பன்
தூரிகையின் கோடுகளால்
துலங்கியவன்
ரவிவர்மன்
கண்ணகியின்
கர்வத்தால்
மாதவியின் வெளிச்சம்
“உண்மை”என்ற
வார்த்தையால்
உயிர் பெற்றவன்
அரிச்சந்திரன்
இவற்றையெல்லாம்
அறிந்த என்னுள்ளம்
இன்னொன்றையும்
அறியத்துடிக்கிறது
ஆம்䤠
அது வேறொன்றுமல்ல
உன் கவிதைகளின்
கருப்பொருளைத்தான்
உன் கவிதைத்தூண்டிலில்
சிக்கி
எனதிதயம்
உனை வந்தடைய
துடிக்கும் போதெல்லாம்
நூலையல்லவா
அறுத்துவிடுகின்றாய்…!
உனது
கவிதைகள்
ஒவ்வொன்றையும் – நான்
எனது
கர்ப்பப்பையின்
கலங்களிளல்லவா
வைத்துப்பாதுகாக்கின்றேன்
என் சுவாசப்பையை
வந்தடையும்
காற்றும்- உன்
கவிதைகளைச்சொல்லி
எனை சுவீகாரம் செய்கிறது
என்
இதயத்துடிப்பை
எண்ணிப்பார்க்க
முயன்றேன்
முடியவில்லை…
அதுவும்
உன் பெயரைத்தான்
உச்சரிக்கிறது
தூக்குமரக் கைதியாய்- நான்
இறைவனிடம்
கேட்பதெல்லாம்
உன் இதயம்
ஒன்றுதான்
ஆனால்- நீயோ
எனை
அரவணைக்க
அருவருக்கிறாய்
ஆனால்
ஒன்று மட்டும்
உறுதியாய்
கூறுகிறேன்…!
என்னிதயம்
துடிப்பதெல்லாம்
உனக்காகத்தான்…
வவுனியன்-