‘இதயத்தை காயப்படுத்தாதே’ பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்
வீரவநல்லூர் பஜனை மடத்தை சேர்ந்தவர் நடராஜ். நெல்லையிலுள்ள தனியார் டவுன் பஸ்சில் பாறைகுளத்திலிருந்து நெல்லை டவுனுக்கு செல்லும் ரூட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
பஸ்சில் வரும் பள்ளி மாணவிகளில் அழகான சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கொடுக்கும் டிக்கெட்டின் பின் பகுதியில் ‘நட்சத்திரத்தின் அழகே… உன் சம்மதம் இருந்தால் உன்னை விரும்புகிறேன். இல்லையெனில் மன்னித்துவிடு. இதயத்தை காயப்படுத்தாதே’ என்று எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ் பாளை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிலிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடராஜ் டிக்கெட் கொடுத்தார். அதில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, கண்டபடி திட்டினர். இதையறிந்த பயணிகள் கொதித்தெழுந்து கண்டக்டருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், கண்டக்டர் நடராஜ் மீது ஈவ்டீசிங் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.