தொலைதூரத்தில் இருக்கும் காதலர்களுக்கு மிகப் பெரிய வரமாக இன்டர்நெட் அமைந்துள்ளதாம். லண்டனில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வு இதை தெரிவிக்கிறது.
வேலை, படிப்பு உள்ளிட்ட நிறைய காரணங்களால் காதலன் ஓரிடத்திலும் காதலி வேறு இடத்திலும் இருக்க வேண்டி உள்ளது. இவர்களுக்கு இன்டர்நெட்தான் கண்கண்ட தெய்வமாக உள்ளது. எத்தனை ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்தாலும், காதலை வாழ வைக்கிறதாம் இன்டர்நெட்.
சோஷியல் நெட்வொர்க்கிங் என்று சொல்லக் கூடிய இணையதளங்கள் பலரும் பழகும் வாய்ப்பை அள்ளித் தருகின்றன. அது போக, புதிது புதிதாக காதல் மலரவும் இவை வாய்ப்பை தருகின்றன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதம் பேர் தொலைதூர காதலை தாங¢கள் இன்டர்நெட் மூலமாக அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளனர். வீடியோ போன் அழைப்பு, எஸ்எம்எஸ் ஆகியவற்றை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
14 சதவீதம் பேர், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஜோடி வசிக்கும் இடம், 2 மணி நேர பயண தூரத்தில் இருக்கிறது எனத் தெரிவித்து உள்ளனர். இவ்வளவு தூரம் இருந்தாலும் இன்டர்நெட்டால் காதல் வாழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவ்வளவு தொலைவில் இருப்பவர்கள் காதலிப்பது சிரமமாக இருந்தது. நடைமுறை சிக்கல்கள்தான் காரணம்.
ஆய¢வில் பங்கேற்றவர்களில் நால்வரில் ஒருவர், இன்டர்நெட் மூலமாகத்தான் காதல் மலர்ந்தது என ஒப்புக் கொண்டுள்ளனர்.