Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » பாட்டு கேட்டு ஓடலாம்

பாட்டு கேட்டு ஓடலாம்

குத்துப்பாட்டு கேட்டால் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆம்! உடற்பயிற்சி செய்யும்போதோ, நடைப்பயிற்சி செய்யும்போதோ மனதை துள்ள வைக்கும் பாடல்களை கேட்டோம் என்றால் கூடுதலாக உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடற்பயிற்சியின் போது வழக்கமாக கிடைக்கும் பலன்களை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகமாக கிடைக்கும்.

உதாரணமாக பாட்டு கேட்காமல் ஓடும்போது மனம் சமநிலையில் இருக்கும். எனவே கொஞ்ச தூரம் ஓடியவுடன் களைப்பு ஏற்படும். ஆனால் பாட்டு கேட்கும்போது மனம் உற்சாகம் அடைவதால், கூடுதலான தூரம் ஓடுவோம். இதனால் அதிக சக்தி செலவாகும். பலன்களும் கூடுதலாக கிடைக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும் பல்வேறு நபர்களை ஆய்வு செய்து பார்த்த போது, அவர்கள் துள்ளல் இசைப் பாடல்களை கேட்டபோது வேகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். எனவே மனதை துள்ள வைக்கும் குத்துப்பாடல்களை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த பலன்களைத் தரும்.

Leave a Reply