பெண்களை கவர்வதற்காக ஆண்கள் பணத்தை தண்ணீராக செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்காக ஆண்கள் செய்யும் செலவு பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களிடம் பல கேள்விகளை ஆய்வாளர்கள் கேட்டனர். ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
அதில், பெண்களை கவர்வதற்காக ஆண்கள் அதிக அளவில் செலவிடுவது தெரியவந்துள்ளது. வருமானம் குறைவாக இருந்தாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பணத்தை தண்ணீராக ஆண்கள் செலவிடுகிறார்களாம்.
திருமணம் ஆன பிறகும் மற்ற பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள்தான் அதிக அளவில் செலவு செய்கிறார்களாம். 25 சதவீத ஆண்கள் கடந்த 5 ஆண்டில் 3 பெண்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்ததாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதனால் பணத்தை இழந்த அவர்கள் சூடுகண்ட பூனையாக, அடுத்த 5 ஆண்டில் ஒரு பெண்ணுடன் மட்டுமே நட்பு வைக்கப்போவதாக கூறி உள்ளனர். 2 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டில் 6 பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்களில் பலர் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்காக ஏன் இப்படி செலவழிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ÔÔபர்சில் இருக்கும் பணத்தை பார்த்துதான் பெண்கள் பழகுகிறார்கள். அவர்களை கவர்வதற்கு பணத்தை செலவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால்தான் கடன் வாங்கியாவது செலவு செய்கிறோம்ÕÕ என்று பெரும்பாலான ஆண்கள் தெரிவித்துள்ளனர்.