காதலிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் 2 வார படிப்பை ஜெர்மனி பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
காதல் இல்லாவிட்டால் மனித இனம் எப்போதோ அழிந்திருக்கும். ஆனால், அந்த காதலை வெளிப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலர் தடுமாறுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பாட்ஸ்டேம் பல்கலைக் கழகம் புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிப்பில் சேர்ப்பவர்களுக்கு காதலிப்பது எப்படி என்று பேராசிரியர்கள் சொல்லித் தருகிறார்கள். இந்த படிப்பில் பெண்களுக்கு இடமில்லை.
முதல் கட்டமாக அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்கள் இந்த புதிய படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஒரே வாரத்தில் 440 மாணவர்கள் காதல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த 2 வார படிப்பில் சேர்பவர்களுக்கு, பெண்களை கவர்வது எப்படி? என்பதை விரிவாக சொல்லித் தருகிறார்கள். எஸ்.எம்.எஸ்., இ-மெயில், கடிதங்கள் மூலம் பெண்களின் நெஞ்சில் இடம் பிடிப்பது எப்படி என்பது குறித்து விளக்குகின்றனர்.
எதற்காக இந்த படிப்பு என்று கேட்டதற்கு, மாணவர்கள் தொழிலில் மட்டுமல்ல, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறது பல்கலைக் கழக நிர்வாகம்.