Home » கொறிக்க... » பெண்ணுலகம் » நீங்கள் நல்ல மனைவிதானா?!

நீங்கள் நல்ல மனைவிதானா?!

– உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’

நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம்.

1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன்.

ஆ. என்ன விஷயம் என்று கேட்டு, அதற்கான தீர்வு சொல்வேன்.

இ. கண்டு கொள்ளவே மாட்டேன்.

2. டென்ஷனுக்கான காரணத்தை அறிந்த பின்னர்..?

அ. எனக்கு ஏற்பட்ட டென்ஷன் மற்றும் கவலையை அவரிடம் சொல்வேன்.

ஆ. இப்படியெல்லாம் கூட நடக்குதா என்று ஆச்சரியப்படுவேன்.

இ. ஒரு கப் காபி கொடுத்து பேசிக் கொண்டிருப்பேன்.

ஈ. டென்ஷனுக்கு யார் காரணமோ அவருக்கு சாபம் கொடுப்பேன்.

3. உங்களுடைய கணவர் மது அருந்துவதை கண்டுபிடிக்கும்போது..?

அ. கூச்சல் போட்டு கலாட்டா பண்ணுவேன்.

ஆ.என் தலையெழுத்து இது தானா என்று நினைத்து அமைதியாகி விடுவேன்.

இ. குடித்து விட்டு வரும்போது அமைதியாக இருந்துவிட்டு, மறுநாள் காலையில் `இனி குடிக்காதீங்க’ என்று உபதேசம் செய்வேன்.

ஈ. கணவரைப் பற்றி உறவினர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்துவேன்.

4. குடிப்பதை நிறுத்திய கணவர் மீண்டும் குடிக்க ஆரம்பித்தால்..?

அ. பரவாயில்லை… மீண்டும் முயற்சித்தால் நிறுத்தி விடலாம் என்று அவரிடம் சொல்லுவேன்.

ஆ. நீங்க உருப்படவே மாட்டீங்க என்று அவரை சத்தம் போடுவேன்.

இ. கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவேன்.

5. உங்களுடைய கணவர் மீது கோபம் வந்தால்..?

அ. கோபம் வந்ததற்கான காரணத்தை தெளிவாக எடுத்துரைப்பேன்.

ஆ. அவர் மீதுள்ள கோபத்தை குழந்தைகள் மீது காட்டி அடிப்பேன்.

இ. செக்ஸ் விஷயத்தில் அவரை என்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வேன்.

ஈ. ஒரு ராத்திரி வரைதான் கோபத்தோடு என்னால் இருக்க முடியும். அடுத்த நாள் நானாகவே பேசிவிடுவேன்.

6. நீங்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென்று உங்களுடைய கணவர் ஏதாவது ஒரு வேலையை சொன்னால்..?

அ. கணவர் சொன்ன வேலையை செய்து கொடுப்பேன்.

ஆ. முடியாது என்று மறுத்துவிடுவேன்.

இ. காதில் கேட்காதது மாதிரி இருந்து விடுவேன்.

ஈ. பிஸியாக இருக்கிறேன், கொஞ்ச நேரம் கழித்து செய்கிறேன் என்று கூறிவிடுவேன்.

7. உங்களுடைய அம்மா வீட்டுக்கு செல்வதற்காக கணவரிடம் பணம் கேட்கிறீர்கள். கணவர் பணம் தர மறுத்தால்..?

அ. அம்மா வீட்டுக்கு போக மாட்டேன்.

ஆ. சுய சம்பாத்தியம் இருந்தால் இப்படி இருக்காதே என்று நினைத்து நானும் சம்பாதிக்க முயற்சிப்பேன்.

இ. அம்மா வீட்டுக்கு போன் செய்து யாரிடமாவது பணம் கொடுத்து அனுப்புமாறு கூறுவேன்.

ஈ. கணவருடைய உறவினரின் வீட்டுக்கு போக சொன்னாலும் மறுத்து விடுவேன்.

8. திருமண நாளில் என்ன செய்வீர்கள்?

அ. கணவருக்கு பரிசு வழங்குவேன்.

ஆ. திருமண நாளைப் பற்றி கவலை இல்லை.

இ. பரிசு எதுவும் கொடுப்பதில்லை.

ஈ. எனக்கு அவர் பரிசளிப்பார். நான் அவருக்கு பரிசு அளிப்பேன்.

9. உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது?

அ. திருப்தி

ஆ. சுமார்

இ. தெரியாது.

ஈ. வெறுப்பாக உள்ளது.

10. நீங்களும், உங்களுடைய கணவரும் ஜோடியாக பயணம் மேற்கொள்வீர்களா?

அ. எப்போதாவது…

ஆ. அடிக்கடி

இ. சேர்ந்து போவதில்லை.

11. இப்படிப்பட்டவரை கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது என்று நினைப்பதுண்டா?

அ. அடிக்கடி அப்படி நினைப்பதுண்டு.

ஆ. அப்படி நினைப்பதில்லை.

இ. எப்போதாவது அப்படி நினைப்பதுண்டு.

ஈ. நாம் வாழ்க்கையில் சேர்ந்திருக்கவே கூடாது என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

12. பிள்ளைகள் முன்பு, கணவரை குறை கூறுவீர்களா?

அ. இல்லை.

ஆ. எப்போதாவது

இ. அடிக்கடி.

13. சமையலறை வேலைக்கு உதவியாக கணவர் மற்றும் பிள்ளைகளை பயன்படுத்து வீர்களா?

அ. அடிக்கடி

ஆ. இல்லை

இ. அபூர்வமாக

14. கணவரின் அன்பான தொடுதல், வருடல்களை எந்த அளவுக்கு அனுபவிக்கிறீர்கள்?

அ. அடிக்கடி

ஆ. ஒருபோதும் அனுபவிப்பதில்லை.

இ. எப்போதாவது

15. கணவரை பாராட்டுவீர்களா?

அ. எப்போதாவது

ஆ. அடிக்கடி

இ. இல்லை.

16. கணவருடைய உதவியோடு வீட்டு நிர்வாகத்தை சந்தோஷமாக செய்ய முடிகிறதா?

அ. இல்லை

ஆ.அரைகுறை மனதோடு

இ. சிறப்பாக

ஈ. எப்படியோ நடந்து கொண்டிருக்கிறது.

17. திருமணம் நடந்தபோது ஏற்பட்ட இன்பமான அனுபவங்களை நினைவில் வைத்துள் ளீர்களா?

அ. தேவைப்படும்போது நினைத்து பார்ப்பேன்.

ஆ. எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.

இ. பழைய சம்பவங்களை ஒருபோதும் நினைப்பதில்லை.

***

உங்களைப் பற்றி…

* மதிப்பெண்கள் 40க்கு கீழே என்றால்…

நீங்கள் நல்ல மனைவியாக இருக்கவில்லை. உங்களுடைய கணவருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். தன்னம்பிக்கை உடையவராக நீங்கள் இருந்தாலும், கணவர் சொல்படி கேளுங்கள். இதனால் தப்பில்லை. நீங்களும், உங்களுடைய கணவரும் தனிமையில் மனம்விட்டு பேசுங்கள். உங்களுடைய கணவர், உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ… அதேபோல் முதலில் நீங்கள் உங்கள் கணவரிடம் நடந்து கொள்ளுங்கள். கணவரின் ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள். சின்னச் சின்ன தவறுகளை பெரிதாக்காமல் கணவருக்கு புரிய வைத்து, சந்தோஷப் படுத்துங்கள்.

* மதிப்பெண்கள் 40 முதல் 50 வரையில்…

நீங்கள் சுமார் மனைவி என்று சொல்லலாம். நல்ல நெருக்கமுள்ள லட்சிய தம்பதிகள்தான் நீங்கள். ஆனால் உங்களுக்கிடையே இன்னும் நெருக்கம் உருவானால் நல்லது. அதற்காக உங்களுடைய நடவடிக்கையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய கணவருக்கும் இடையில் இருப்பது கடமை கலந்த பாசமும், உரிமையும். அதை, எதையும் எதிர்பார்க்காத காதலாக மாற்றுங்கள். அப்புறம் உங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் ஜாலிதான்!

* மதிப்பெண்கள் 50 முதல் 60வரை…

மற்றவர்கள் பார்த்து, நினைத்து பொறாமைப்படும் பொருத்தமான ஜோடி நீங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி, ஆரோக்கியம் என எல்லாமே கலந்திருக்கும் என்றாலும், சின்ன விஷயத்தில் இருவரும் சறுக்கி விடுவீர்கள். ஆனாலும் உங்களிடம் இருக்கும் பொறுமை என்ற தூண்டிலால் வாழ்க்கை என்னும் ஆற்றில் மகிழ்ச்சி என்னும் மீனை கண்டிப்பாக பிடித்துவிட முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்துவிட்டால் உங்களுக்குள் காற்றுகூட புகுந்து வெளியே வர முடியாது.

* மதிப்பெண்கள் 60க்கும் மேல்…

நீங்கள் இந்த கேள்விகளை மட்டுமல்ல… உங்களுடைய கணவர், உங்களுடைய வாழ்க்கை என்று எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் நீங்களும், உங்களை அவர்களும் புரிந்துள்ளனர். கணவருக்கும், உங்களுக்கும் இடையே உள்ள புரிதல், காதல் என்பதை விட அதையும் தாண்டி புனிதமானது!

***

ஸ்கோர்

கேள்வி – அ ஆ இ ஈ

1) 1 5 0 –

2) 0 0 5 1

3) 0 1 4 0

4) 5 0 0 –

5) 4 0 0 5

6) 1 0 0 4

7) 0 5 2 0

8.) 5 0 0 1

9) 4 2 0 0

10) 1 4 0 –

11) 3 5 0 0

12) 4 0 2 –

13) 4 2 1 –

14) 5 0 2 –

15) 2 5 0 –

16) 0 0 5 2

17) 1 5 0 –

Leave a Reply