Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » அர்த்தமுள்ள வாழ்க்கை ஆனந்தம் தரும்!

அர்த்தமுள்ள வாழ்க்கை ஆனந்தம் தரும்!

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், ïதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் ïத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன்.

ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ïத மக்களையும் கொல்ல அவன் தயங்கியது கிடையாது. ஹிட்லரின் நாஜிக் படையினரிடம் சிக்கிக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதால் பல ïதர்கள் ஓடி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு ïத குடும்பம், நண்பர் ஒருவரது வீட்டில் ஒளிந்து வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில் ஒருத்தியான ஆன்னி பிராங்க் என்பவள், நாஜிக் படைகளுக்கு பயந்து தாங்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் மற்றும் தனது மனதில் தோன்றும் ஆசாபாசங்கள், உயிர் வாழ்வதில் தனக்குள்ள ஆசை போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்தாள்.

ஆனால், 1944ல் இவளது குடும்பம் நாஜிக் படையிடம் காட்டிக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு ஆன்னி பிராங்க் கொல்லப்பட்டாள். அவளது தந்தை எப்படியோ தப்பித்து வந்து, மகள் ஆன்னி பிராங்க் எழுதிய டைரியை தேடி கண்டுபிடித்தார். இதற்குள் போர் முடிந்து, ஜெர்மனியும் சரணாகதி அடைந்துவிட்டது. ஹிட்லரும் தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சூழ்நிலையில், ஆன்னி பிராங்கின் தந்தை, அவள் டைரியில் எழுதிய விஷயங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். ஒரு சிறுமி ïதர்கள் பட்ட கஷ்டங்களை கூறுவதுபோல் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த புத்தகம் உடனேயே 20 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. திரைப்படமாகவும் அது தயாரானது. இதுதவிர, பல மொழிகளிலும் ஆன்னி பிராங்கின் எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் இருந்து என்ன தெரிகிறது?

வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களுக்கும் அர்த்தம் இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழ்வதில் தான் சிறப்பும் இருக்கிறது.பெற்றோர், மனைவி, குழந்தைகள், சொந்தங்கள், நண்பர்கள் – இப்படி எல்லோருடனும் உங்களது வாழ்க்கை அர்த்தம் பெற வேண்டும். அதுதான் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

பெற்றோர்: ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குபவர்கள் பெற்றோர். உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதில் இருந்து, உங்களது வளமான வாழ்வுக்கு வழிகாட்டுவது வரையில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யக்கூடியவர்கள். உங்களது பெற்றோரை எந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து தான், அவர்கள் உடனான உங்களது வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்துகொள்ள முடியும்.

1989ம் ஆண்டு ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில், ஒரு தாய் தனது 3 வயது குழந்தையுடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டாள். அவளால் வெளியே வரமுடியவில்லை. மீட்பு குழுவினராலும் உடனடியாக மீட்டுவிட முடியவில்லை.

பசித்தால் அழும் குழந்தைக்கு என்ன கொடுக்க முடியும்? தனது ரத்தத்தையே தாய்ப்பாலாக்கி கொடுப்பவள் தானே தாய்? அந்த ரத்தத்தையே குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்று முடிவு செய்தவள், அழுத குழந்தைக்கு தனது ரத்தத்தையே உணவாக கொடுத்தாள். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; 8 நாள் வரை தனது ரத்தத்தையே கொடுத்து குழந்தையை காப்பாற்றினாள், அந்த பாசக்கார தாய்.

தனது உடலில் இருந்து ரத்தத்தை எடுக்க அவள் பட்டபாடு, நமது நெஞ்சிலும்கூட வலியை ஏற்படுத்திவிடும். தனது விரல்களை ஊசியால் குத்திக் குத்தி, ரத்தத்தை எடுத்து குழந்தைக்கு அதை ஊட்டி இருக்கிறாள் அவள்.

ஒரு தாய்க்கு இணையாக இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.

ஒரு தந்தையின் கடமையும் அப்படித்தான். குழந்தையை அரவணைப்பதோடு, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும் நல்வழிப்படுத்துபவர், ஒரு தந்தை.

இப்படிப்பட்ட தாய்-தந்தையுடனான உங்கள் வாழ்க்கை எந்த அர்த்தத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை சற்று திரும்பிப் பாருங்கள். தாய்-தந்தையின் அருமை பெருமைகளை ஒவ்வொருவரும் உணர்ந்து விட்டால் நாட்டில் முதியோர் இல்லங்களை எல்லாம் பள்ளிக்கூடங்களாக்கி

விடலாம்.மனைவி : எங்கோ பிறந்து வளர்ந்து, உனக்கே உனக்காய் வந்தவள் தான் மனைவி. மனைவியின் மகத்துவத்தை உணர்த்தத்தான் தன்னில் பாதி இடத்தை பார்வதிக்கு கொடுத்தார் சிவன்.

பசிக்கிறது என்றால் ஓடோடி வந்து ஊட்டிவிட பாசமிகு அன்னையும், பாசத்தை பொழிய சகோதர-சகோதரிகளும் பிறந்த வீட்டில் இருக்க, அவர்களை எல்லாம் துறந்து வாழ வரும் அவளை நம் வீட்டு மகாராணி போல் அல்லவா பாதுகாக்க வேண்டும்!

அப்படி ஒவ்வொருவரும் தங்கள் மனைவியை பாதுகாக்கும்போது, அன்பாய் அரவணைக்கும்போது திடீர் திடீரென்று வெடிக்கும் ஸ்டவ் அடுப்புகளுக்கும், உடலில் எரியும் மண்எண்ணெய்க்கும், துப்பட்டா தூக்குக்கயிறாக மாறுவதற்கும் விடை கொடுத்து விடலாமே?

நம்மை விட்டால் அவளுக்கு வேறு நாதியில்லை என்கிற மனப்போக்கில் அவளுக்கு இன்றும் இழைக்கப்படும் கொடூரங்களின் பின்னணியில் நடப்பவைகளை கொஞ்சம் எண்ணிப் பார்த்தால்… ஒருவேளை அந்த மனைவியின் இடத்தில் நாம் இருந்தால்… நினைக்கும்போதே பாவமாக இருக்கிறது

தானே?உயிருக்கு உயிரானவள் மீது இந்த கொடூர கோழைத்தன தாக்குதல்கள் தேவைதானா? பூ போன்றவளை பூவாகத்தானே பாதுகாக்க வேண்டும்? அவளை தாங்குவதிலும் தவறில்லையே!

இப்படிப்பட்ட மனைவியுடனான உங்களது வாழ்க்கையில் என்ன அர்த்தங்களை இதுவரை கண்டிருக்கிறீர்கள்?

உங்களில் பாதியாய் அவள் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு ஒரு சல்ïட் அடிக்கலாம். மற்றவர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள்: உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி. நீங்கள் எந்த கோட்டில் பயணிக்கச் சொல்கிறீர்களோ, அந்த கோட்டில் தான் அவர்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். நீங்கள் காட்டும் பாதை சரியானதாக இருந்தால், அவர்கள் செல்லும் பாதையும் சரியாக இருக்கும். இல்லையென்றால், அவர்கள் வாழ்க்கையே தடம்புரண்டு விடும்.

உங்கள் குழந்தைக்கு விவரங்கள் புரியும்வரை தாய்-தந்தையாகவே இருங்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியத் துவங்கும்போது சிறந்த நண்பர்களாகி விடுங்கள். அப்போது, எந்த பிரச்சினை என்றாலும், என்ன முயற்சிகள் என்றாலும் உங்களிடம் நிச்சயம் ஆலோசனை கேட்பார்கள். நீங்களும் நிச்சயம் நல்ல வழியை காட்டலாம். குழந்தையின் வாழ்க்கையையும் வளமாக்கலாம்.

சொந்தங்கள் : உங்கள் தகுதியறிந்து தான் சொந்தங்கள் உங்களை நெருங்கிவரும். பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் என்றால் பேயும் வாய் திறக்கும் என்பவை சொந்தங்கள் விஷயத்தில் நிறையவே பொருந்தும்.

பொருளாதாரத்தில் நீங்கள் ஏறுமுகத்தில் இருந்தால் உங்களை ஈ மொய்ப்பதுபோல் சொந்தங்கள் தேடி வரும். இறங்குமுகம் என்றால் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்.

அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும்?

பணத்தை சம்பாதியுங்கள். கூடவே, நல்ல குணத்தையும் சம்பாதியுங்கள். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். எப்போதும் புன்னகை ததும்ப பேச்சை வெளிப்படுத்துங்கள். எந்த நேரத்திலும் ஆதரவாக நில்லுங்கள். நிச்சயம் சொந்தங்கள் உங்களை எளிதில் கைவிட்டு

போய்விடாது.நண்பர்கள்: கூடவே இருக்கும் நண்பர்களுடனான உங்களது பழக்கவழக்கங்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். தேவை என்று ஒன்று வரும்போது தான் உதவி என்ற ஒன்று தேவைப்படுகிறது. அதுபோலத்தான் நண்பர்களும்! நல்ல நண்பர்கள் ஒருவருக்கு கிடைத்திருக்கும்போது உதவிகள் பற்றி கவலைகொள்ள வேண்டாம்.

அதற்காக, எதற்கெடுத்தாலும் நண்பர்களின் உதவியை கேட்பது நல்லதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். நண்பர்களிடம் நிறைய பேசலாம், ஆனால், நிறைய எதிர்பார்க்கக்கூடாது.

நீங்கள் உங்கள் நண்பர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதைத்தான் உங்கள் நண்பர்களும் பெரும்பாலும் எதிர்பார்ப்பார்கள். இதில் விதிவிலக்கானவர்களும் இருக்கலாம்.

அதனால், உங்கள் நண்பர்களுடனான உறவில் தெளிவான மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களை புரிந்துகொள்ளுங்கள்.

மொத்தத்தில் ஒவ்வொருவரும் அர்த்தமுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். அப்போது, வாழ்க்கை மட்டுமல்ல, அந்த வானம் கூட உங்கள் வசப்படும்!

Leave a Reply