Home » கொறிக்க... » பெண்ணுலகம் » இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சி..?

இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சி..?

இது கொஞ்சம் கவர்ச்சிகர விஷயம். பெண்களின் உள்ளாடை பற்றியது.
படத்தில் காட்சியளிப்பவர் பிரேசில் நாட்டின் மாடல் அழகி கிஸ்லி பண்ட்சென். அண்மையில் இவர் டெமி பிரா என்னும் ரக பிராக்களை அறிமுகப்படுத்துவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கே மாடல் அழகிகள் பலருடன் சேர்ந்து இந்த பிராக்களை அணிந்து மேடையில் பவனியும் வந்தார். இந்தபுதிய மாடல் பிராவையும் அதை அணிந்து வந்த அழகிகளின் அணிவகுப்பையும் பார்ப்பதற்காக ஜொள்ளு ரசிகர்கள் ஏராளமாய் திரண்டு விட்டனர்.

சரி. அப்படியென்ன இந்த பிராவிற்குச் சிறப்பு என்கிறீர்களா?…

இதை உருவாக்குவதற்காக விஞ்ஞானிகள் தங்களின் மூளையைக் கசக்கி புதிய வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள். இது தவிர மாடல் அழகிகள், பேஷன் டிசைனர்களின் ஆலோசனையும் முழுமையாகப் பெறப்பட்டு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. மார்பகத்திற்கு அழுத்தம் தெரியாமலிருக்க மூன்றடுக்கில் போம் வைத்து பிராக்கள் தைக்கப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது.

இந்த பிராக்களில் 75க்கும் மேலான ஒட்டு முறை கையாளப்பட்டிருக்கிறது என்பது விசேஷம்.

Leave a Reply