உன் தோளில் கிடக் கிற கர்வத்தில் வகுப்பறையின் வாசல்படியையே தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, உன்னை உள்ளே அழைத்து வந்தது உன் துப்பட்டா.
நீ செய்யும் அட்டூழியம் இப்படி என்றால், உன்னைக் காதலிக்க ஆரம் பித்த பிறகு நான் செய்யும் அட்டூழியங்களைச் சொல்லி மாளாது.
நீ வந்ததும் வராததுமாக என் நண்பர்கள் உன்னிடம் ஓடி வந்து அம்மா தாயே… ரெண்டு நாளா லீவுங்கறதால, ?உங்கிட்ட பேச முடியாத வாயால் யார்கிட்டயும் பேசமுடியாது?னு சொல்லிட்டு, மௌனவிரதம் இருக்கிறானாம். வாயவே தெறக்காம கையைக் காலை ஆட்டி சைகை செஞ்சே, ஹாஸ்டல்ல இருக்கிற எல்லாரையும் கொன்னுட்டான் உன் ஆளு. ஆனா, மூணுவேளையும் சாப்பிட மட்டும் வாயத் தெறந்தான். ?அதுக்கு மட்டும் ஏண்டா தெறக்கிற??னு கேட்டா… ?நான் சாப்பிடலைனா என் தேவதைக்குப் பசிக்குமே!?னு எழுதிக் காட்டுறான் என்று என் அட்டூழி யங்களை எடுத்துவிட்டார்கள்.
நீயோ சிரித்தபடி, சும்மாவே ஏடாகூடமா பேசுவ நீ. இதுல சைகை பாஷை வேறயா… பாவம் பசங்க! என்றாய்.
?ஏடாகூடமாவா..? இன்னிக்கு எங்கிட்ட மாட்டினே..?? என்று நினைத்தபடி ?நேத்து உங்கப்பா அம்மாவோட உன்னைக் கடைவீதியில பார்த்தேனே…? என்று என் மௌன விரதத்தைக் கலைத்தேன்.
?அடப்பாவி… இதைத்தான் நேத்து மதியம் பூரா சைகையில சொல்லி எங்களக் கொன்னியா? என்று என்னை அடிக்க வந்தார்கள் நண்பர்கள்.
அதற்கும் நீ சிரித்தபடி என் கல்யாணத்துக்கு நகை வாங்கப் போனோம் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாய்.
?என்னது… கல்யாணத்துக்கா?ՠஎன்று கத்தினேன் நான்.
கத்தாத… எல்லா அப்பா அம்மாவும் அப்பப்ப தன் பெண்ணோட கல்யாணத்துக்கு நகை வாங்கிச் சேப்பாங்கல்ல… அதான் இது என்றாய்.
அப்பாடா என்று நான் அமைதியடை யும்போது ?என் கல்யாணத்துக் காக எங்க அப்பா அம்மா என்னெல் லாம் சேத்து வைச்சிருக்காங்க தெரியுமா… என்றாய்.
?உங்க அப்பா & அம்மா சேத்து வெச்சதெல்லாம் எனக்கு வேணாம். நீ சேத்து வெச்சிருக்கிறதே போதும் எனக்கு? என்று என் ஏடாகூடத்தை ஆரம்பித்தேன்.
?நான் ஒண்ணும் சேத்துவைக்கலியே? என்றாய் அப்பாவியாக.
?ஒண்ணும் சேத்து வைக்கலியா… தோ, ஒரு பெரிய கண்ணாடி இருக்கே… போய் அதுக்கு முன்னாடி நின்னு பாரு… நீ என்னென்ன சேத்து வெச்சிருக்கேனு தெரியும்? என்றேன்.
ச்சீ என்று அழகு காட்டி விட்டு எங்கடா கத்துகிட்ட இப்படி எல்லாம் பேச என்றாய்.
காதலிடம்! என்றேன் நான்.
உன் பாட்டியின் நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக் கொண்டு
கா கா என்று கத்துவதைப்
பார்த்ததும்
அட… குயில் காகான்னு கூவுதே
என்றேன்.
நீ இலையைக் கிணற்றுமேல்
போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.
உன்னைப் பார்த்தால்
எடை பார்க்கும் இயந்திரம் கூட
கவிதை எழுத ஆரம்பித்துவிடும் போல.
உன் எடையை அடிக்க வேண்டிய இடத்தில்
அழகு நீங்கலாக 50 கிலோ என்று
அடித்திருப்பதைப் பார்!
தபூ சங்கர்-